Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ குடிபோதையில் தகராறு மூன்று பீஹார் வாலிபர்கள் கொலை 

குடிபோதையில் தகராறு மூன்று பீஹார் வாலிபர்கள் கொலை 

குடிபோதையில் தகராறு மூன்று பீஹார் வாலிபர்கள் கொலை 

குடிபோதையில் தகராறு மூன்று பீஹார் வாலிபர்கள் கொலை 

ADDED : மார் 16, 2025 04:54 AM


Google News
சர்ஜாபூர்: பெங்களூரு ரூரல் சர்ஜாபூரில் புதிதாக 14 மாடி கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இங்கு வடமாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கட்டுமானம் அருகிலேயே தங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவில் இருந்து ஹோலி கொண்டாட துவங்கினர். நேற்று காலையில் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த அன்சு, 19, ராதே ஷ்யாம், 20, தீபு, 22 உட்பட ஆறு பேர் மது வாங்கி வந்து, குடித்துக் கொண்டு இருந்தனர்.

குடிபோதையில் ஆறு பேருக்கும் இடையில் திடீரென தகராறு ஏற்பட்டது. அன்சு, ராதே ஷ்யாம், தீபுவை மற்ற மூன்று பேரும் இரும்பு கம்பி, மரக்கட்டைகளால் தாக்கி, கொலை செய்துவிட்டு தப்பினர்.

நேற்று மாலையில், சக தொழிலாளர்கள் கட்டடத்தில் சென்று பார்த்தபோது, மூன்று பேரும் கொலையானது தெரிந்தது. சர்ஜாபூர் போலீசார், தலைமறைவான மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

ரவுடி கொலை


மைசூரு அனுகனஹள்ளியை சேர்ந்தவர் சூர்யா என்ற டோர்சுவாமி, 35. ரவுடி. இவரது மனைவி தீபிகா.

சில மாதங்களுக்கு முன், சூர்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்வேதா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவரை தன் வீட்டிற்கே அழைத்து வந்தார். இதனால், கோபமடைந்த அவரது மனைவி, தாய் வீட்டை விட்டுச் சென்றார்.

ஸ்வேதாவுடன் தான் இருக்கும் அந்தரங்க புகைப்படங்களை சூர்யா வெளியிட்டார். இதனால், அவர் பணம் கேட்டு தொல்லை செய்தார். பணத்திற்காக குடும்ப சொத்தை விற்க சூர்யா முயற்சித்தார். ஆனால், குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை.

நேற்று முன்தினம் அனுகனஹள்ளி பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில், ரத்த காயங்களுடன் சூர்யா இறந்து கிடந்தார். மைசூரு மாவட்ட போலீசார் விசாரித்தனர். ஹோட்டலுக்கு ஸ்வேதாவுடன் வந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us