'மவுன்ட் லோட்சேவில்' ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு
'மவுன்ட் லோட்சேவில்' ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு
'மவுன்ட் லோட்சேவில்' ஏறிய மலையேற்ற வீரர் உயிரிழப்பு
ADDED : மே 21, 2025 03:09 AM

புதுடில்லி : நான்காவது உயரமான மலைச் சிகரமான மவுன்ட் லோட்சே, இமயமலை தொடரில், நேபாளம் மற்றும் திபெத் இடையில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 27,939 அடி உயரத்தில் உள்ளது.
உடலை உறைய வைக்கும் இந்த பனிச்சிகரத்தில், ராஜஸ்தானை சேர்ந்த ராகேஷ் பிஷ்னோய் என்ற மலையேற்ற வீரர் நேற்று முன்தினம் ஏறி சாதனை படைத்தார்.
பின் அங்கிருந்து திரும்பும் வழியில் யெல்லோ பான்ட் பகுதியில் அவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது உடலை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.