UPDATED : மார் 23, 2025 04:59 PM
ADDED : மார் 23, 2025 01:49 PM

பெங்களூரு: பெங்களூரு அருகே மதுரம்மா கோவில் தேரோட்டத்தில், தேர் சாய்ந்ததில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே பரப்பன அக்ரஹாராவின் ராயசந்திரா பகுதியில் மதுரம்மா கோவில் தேரோட்டம் நேற்று (மார்ச் 22) மாலை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்து வந்தனர். 100 அடி உயரம் கொண்ட தேர் சாலையில் வரும் போது சாய்ந்து விழுந்தது. இதில் இருவர் பலியாகினர்.
அவர்கள் பெங்களூரை சேர்ந்த ஜோதி, ஓசூரை சேர்ந்த லோகித் என அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.