Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'காந்தாரா' திரைப்பட பாணியில் நிகழ்வு பூத கோல நடனம் ஆட இருவர் தேர்வு

'காந்தாரா' திரைப்பட பாணியில் நிகழ்வு பூத கோல நடனம் ஆட இருவர் தேர்வு

'காந்தாரா' திரைப்பட பாணியில் நிகழ்வு பூத கோல நடனம் ஆட இருவர் தேர்வு

'காந்தாரா' திரைப்பட பாணியில் நிகழ்வு பூத கோல நடனம் ஆட இருவர் தேர்வு

ADDED : ஜன 29, 2024 07:31 AM


Google News
Latest Tamil News
மங்களூரு: காந்தாரா திரைப்பட பாணியில், உண்மை நிகழ்வாக, பூத கோல நடனம் ஆட, இருவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான, காந்தாரா திரைப்படம், கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் கிராமப்புற பகுதிகளில், கோவில் திருவிழாவின்போது, பாரம்பரிய பூத கோல நடனம் ஆடுவது பற்றிய, கதையை கருவாகக் கொண்டது.

இந்த திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டியின் தந்தையாக நடித்தவர், பூத கோல நடனம் ஆடுவார். அவர் இறந்த பின்னர், நடனம் ஆடுவதற்கு, பஞ்சுருளி தெய்வம் முன்பு பிரசன்னம் பார்க்கும்போது, ரிஷப் ஷெட்டி தான் அதற்கு தகுதியானவர் என்று தெரியவரும்.

இதனால் ரிஷப் ஷெட்டி பூத கோல நடனம் ஆடுவார். இதுபோன்று உண்மை நிகழ்வு, தட்சிண கன்னடாவில் நடந்து உள்ளது. தட்சிண கன்னடாவின் கடபா எடமங்களா கிராமத்தைச் சேர்ந்தவர் கந்து அஜிலா. கிராமத்தில் நடக்கும் கோவில் திருவிழாக்களில், பூத கோல வேஷமிட்டு நடனம் ஆடுவார். சில மாதங்களுக்கு முன்பு, கோவில் திருவிழாவில் பூத கோல நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

கந்து அஜிலா இறந்த பின்னர், யாரை பூத கோல நடனம் ஆட வைப்பது என்று தெரியாமல், கிராம மக்கள் யோசித்தனர்.

கந்து அஜிலாவின் மகன்கள் மோனப்பா, தினேஷிடம் பூத கோல நடனம் ஆடும்படி கிராம மக்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால் பஞ்சுருளி தெய்வம் உத்தரவு கொடுத்தால் தான், நடனம் ஆடுவதாக தெரிவித்தனர்.

இதனால் பஞ்சுருளி தெய்வம் முன், பிரசன்னம் பார்த்தபோது, மோனப்பாவும், தினேஷும் பூத கோல நடனம் ஆட உத்தரவு கிடைத்தது. இனி நடக்கும் திருவிழாக்களில், அவர்கள் இருவரும் நடனம் ஆட உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us