Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஹரியானா அரசு பஸ் மோதி இரு தொழிலாளர்கள் பலி

ஹரியானா அரசு பஸ் மோதி இரு தொழிலாளர்கள் பலி

ஹரியானா அரசு பஸ் மோதி இரு தொழிலாளர்கள் பலி

ஹரியானா அரசு பஸ் மோதி இரு தொழிலாளர்கள் பலி

ADDED : செப் 26, 2025 01:43 AM


Google News
சிவில் லைன்ஸ்: வடக்கு டில்லியின் புறவழி சுற்றுவட்டச் சாலையில் நேற்று காலை பைக் மீது ஹரியானா அரசு பேருந்து மோதிய விபத்தில், இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

நரேலாவைச் சேர்ந்த சவி, 19, கரண், 28, ஆகிய இருவரும் நேற்று காலை பைக்கில் தாங்கள் பணிபுரியும் இடங்களுக்கு சென்று கொண்டிருந்தனர். சவி, செருப்பு தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். கரண், கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் துணி சலவை செய்யும் பிரிவில் வேலை செய்தார்.

புறவழி சுற்றுவட்டச்சாலையில் நேற்று காலை 7:25 மணி அளவில் இவர்கள் பைக்கில் சென்றபோது, வேகமாக வந்த ஹரியானா மாநில அரசுப் பேருந்து மோதியது. இதில் பைக் சறுக்கி இருவரும் சாலையில் விழுந்தனர்.

அவர்கள் மீது பேருந்தின் டயர் ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் லைன்ஸ் போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய ஹரியானா மாநிலத்தின் ரோஹ்தக்கைச் சேர்ந்த ஓட்டுநர் நரேந்திரா, 49, என்பவரை போலீசார் கைது செய்தனர். 2018 முதல் ஒப்பந்த அடிப்படையில் அவர், ஹரியானா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு ஏற்படுத்திய மரண விபத்து தொடர்பாக அவருடைய ஓட்டுநர் உரிமம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து அவர் பேருந்தை இயக்கி வந்தது, விசாரணையில் தெரிய வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us