Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'ஐ லவ் முகமது' விவகாரத்தில் வெடித்த வன்முறை; உத்தர பிரதேச மதகுரு தவ்கீர் ரசா கான் கைது

'ஐ லவ் முகமது' விவகாரத்தில் வெடித்த வன்முறை; உத்தர பிரதேச மதகுரு தவ்கீர் ரசா கான் கைது

'ஐ லவ் முகமது' விவகாரத்தில் வெடித்த வன்முறை; உத்தர பிரதேச மதகுரு தவ்கீர் ரசா கான் கைது

'ஐ லவ் முகமது' விவகாரத்தில் வெடித்த வன்முறை; உத்தர பிரதேச மதகுரு தவ்கீர் ரசா கான் கைது

ADDED : செப் 28, 2025 06:55 AM


Google News
Latest Tamil News
லக்னோ : உத்தர பிரதேசத்தில், 'ஐ லவ் முகமது' போஸ்டர் விவகாரம் தொடர்பாக முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உள்ளூர் மதகுரு தவ்கீர் ரசா கான் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

எதிர்ப்பு உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, கான்பூரில் உள்ள ராவத்பூரில் கடந்த 4-ம் தேதி மிலாடி நபி விழா நடந்தது.

இதையொட்டி, அப்பகுதியில் 'ஐ லவ் முகமது' என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மிலாடி நபி ஊர்வலத்திலும், இது குறித்த பதாகைகள் எடுத்துச் செல்லப்பட்டன. இதற்கு ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, வகுப்பு​வாதத்தை துாண்டியதாக அடையாளம் தெரியாத 15 பேர் உட்பட 24 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முஸ்லிம்கள் முடிவு செய்தனர்.

பரேலியைச் சேர்ந்த உள் ளூர் மதகு ருவும், இத்திஹாத் - இ - மில்லத் கவுன்சிலின் தலைவருமான மவுலானா தவ்கீர் ரசா கான், நேற்று முன்தினம் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்து, இஸ்லாமி யர்க ள் ஒன்றுகூட அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதையும் மீறி, பரேலியில் தவ்கீர் வீட்டின் அருகே கூடிய முஸ்லிம்கள், அங்கிருந்த மசூதி மற்றும் தர்கா அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியா இன்டர் கல்லுாரி மைதானத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். ​​

தடியடி போலீசார் அவர்களை தடுத்த போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர். கடைகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இரு சக்கர வாகனங்களும் எரிக்கப்பட்டன.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். சில மணி நேரப் போராட்டத்துக்கு பின் நிலைமை கட்டுக்குள் வந்தது.

இந்நிலையில், வன்முறைக்கு காரணமாக இருந்ததாக கூறி, மதகுரு மவுலானா தவ்கீர் ரசா கானை போலீசார் நேற்று கைது செய்தனர். வன்முறையில் ஈடுபட்ட மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

அடையாளம் தெரியாத 1,700 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, பரேலியில் நடந்த வன்முறை சம்பவம், முன்கூட்டியே திட்டமிட்ட சதி என போலீஸ் டி.ஐ.ஜி., அஜய்குமார் சாஹ்னி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எச்சரிக்கை

வன்முறையில் ஈடுபட்டவர்களை தனித்தனியாக அடையாளம் கண்டு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும், கடும் தண்டனை வழங்கவும் போலீசாருக்கு முதல்வர் யோகி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், லக்னோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “உத்தர பிரதேசத்தில், 2017 முன் இருந்த நடைமுறை வேறு. என்னுடைய ஆட்சியில் உள்ள நடைமுறை வேறு. யார் தலைமையில் உத்தர பிரதேசம் இயங்குகிறது என்பதை மறந்து மதகுரு ஒருவர் செயல்பட்டுள்ளார். இதன் விளைவுகள் வன்முறையாக வெடித்தது. இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களுக்கு நாங்கள் கற்பிக்கும் பாடம், எதிர்காலத்தில் கலவரம் மற்றும் வன்முறையில் ஈடுபடுபவர்களை சிந்திக்க வைக்கும்,” என்றார்.



'ஐ லவ் யோகி'

'ஐ லவ் முகமது' போஸ்டருக்கு பதிலடியாக, உத்தர பிரதேசத்தின் லக்னோ, பரேலி உள்ளிட்ட பல பகுதிகளில் 'ஐ லவ் யோகி ஆதித்யநாத் ஜி' மற்றும் 'ஐ லவ் புல்டோசர்' போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. உத்தர பிரதேசத்தில் கடும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தண்டனை அளித்து வரும் அரசு, அனுமதியின்றி கட்டப்பட்ட அவர்களின் வீடுகளையும் புல்டோசர் வாயிலாக இடித்து வருகிறது. இதை பிரதிபலிக்கும் வகையிலேயே, 'ஐ லவ் புல்டோசர்' என்ற வாசகம் அச்சிடப்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us