பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி
பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்; இந்திய ராணுவம் உறுதி

புதுடில்லி: ''பாகிஸ்தானின் சதித்திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம்'' என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
எல்லைப் பகுதியில், இந்திய நகரங்களை குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆனால், வானிலையே இடைமறித்து சுட்டு வீழ்த்தி நமது பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த புகைப்படத்தை வெளியிட்டு இந்திய ராணுவம் கூறியிருப்பதாவது: நமது மேற்கு எல்லைகளில் பாகிஸ்தான் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இன்று அதிகாலை 5 மணியளவில், அமிர்தசரஸின் காசா கான்ட் மீது பல எதிரி ஆயுதமேந்திய டிரோன்கள் பறந்து செல்வது காணப்பட்டது.
உடனடியாக நமது பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி அழித்தனர். மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் ஏற்றுக் கொள்ள முடியாதது. இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் சதித்திட்டங்களை ஏற்க முடியாது. பாகிஸ்தானின் திட்டங்களை தொடர்ந்து முறியடிப்போம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போர் நிறுத்தம்
இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.