அமைச்சர் அமித் ஷாவுக்கு வரவேற்பு பிரதாப் சிம்ஹா - பிரீத்தம் கவுடா 'லடாய்'
அமைச்சர் அமித் ஷாவுக்கு வரவேற்பு பிரதாப் சிம்ஹா - பிரீத்தம் கவுடா 'லடாய்'
அமைச்சர் அமித் ஷாவுக்கு வரவேற்பு பிரதாப் சிம்ஹா - பிரீத்தம் கவுடா 'லடாய்'
ADDED : பிப் 12, 2024 06:28 AM
மைசூரு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை வரவேற்பதில், பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹாவுக்கும், அக்கட்சியை சேர்ந்த ஹாசன் முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று முன்தினம் மைசூரு வருகை தந்தார்.
அவரை வரவேற்க, மாநில, மாவட்ட தலைவர்கள் மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் கூடியிருந்தனர். விமான நிலையத்துக்குள் அவரை வரவேற்க, முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. முக்கிய நபர்கள் தயாராக இருந்தனர்.
அப்போது அமித் ஷாவை வரவேற்க, ஹாசன் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடாவும் வந்தார். இதை பார்த்த பிரதாப் சிம்ஹா, 'அனுமதி பெற்றவர்களை மட்டும் அனுப்பவும்' என அங்கிருந்தே போலீசாரிடம் கூறினார். இதற்கு பிரீத்தம் கவுடா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.
இதனால் கோபமடைந்த பிரதாப் சிம்ஹா, 'இதையெல்லாம் ஹாசனில் விட்டு விடுங்கள். இங்கு அது நடக்காது' என கூறினார்.
இதனால், இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்த மூத்த தலைவர்கள், இருவரையும் சமாதானப்படுத்தினர்.
பிரதாப் சிம்ஹாவும், பிரீத்தம் கவுடாவும் பா.ஜ.,வில் இளம் தலைவர்கள். எதிர்க்கட்சிகளை சாமர்த்தியமாக எதிர்கொள்கின்றனர். இதனால் கட்சி மேலிடம், இவர்கள் மீது தனி அபிப்பிராயம் வைத்துள்ளது. ஏன் சண்டை போடுகின்றனர் என மற்றவர்கள் விமர்சித்தனர்.