இந்தியாவின் தேசிய மொழி எது?- ஸ்பெயினில் கனிமொழி 'நச்' பதில்
இந்தியாவின் தேசிய மொழி எது?- ஸ்பெயினில் கனிமொழி 'நச்' பதில்
இந்தியாவின் தேசிய மொழி எது?- ஸ்பெயினில் கனிமொழி 'நச்' பதில்
ADDED : ஜூன் 04, 2025 02:05 AM

புதுடில்லி: இந்தியாவின் தேசிய மொழி எது எனக் கேட்ட ஸ்பெயின் நாட்டு பிரதிநிதிகளுக்கு, தி.மு.க., -- எம்.பி., கனிமொழி, 'வேற்றுமையில் ஒற்றுமை' என பதிலளித்து கவனம் ஈர்த்தார்.
பாக்., பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, ஏழு எம்.பி.,க்கள் தலைமையிலான குழு பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, தி.மு.க.,- - எம்.பி., கனிமொழி தலைமையிலான குழு, ஐரோப்பிய நாடான ஸ்பெயின் சென்றது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் அந்நாட்டின் பிரதிநிதிகளுடன் இந்திய குழுவினர் கலந்துரையாடினர்.
அப்போது, இந்தியாவின் தேசிய மொழி எது? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த எம்.பி., கனிமொழி, 'வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் தேசிய மொழி. இந்தக் குழு உலகிற்குக் கொண்டு வரும் செய்தியும் இதுதான்' என்றார்.
இந்த பதிலுக்கு அரங்கத்தில் இருந்தவர்கள் சில நிமிடங்கள் கைதட்டினர். கனிமொழி தலைமையிலான எம்.பி.,க்கள் குழு ஐந்து நாடுகள் பயணத்தை முடித்து, நேற்று நாடு திரும்பியது.
இந்தக் குழுவில் சமாஜ்வாதி கட்சி எம்.பி., ராஜிவ்குமார் ராய், பாஜ.,வின் பிரிஜேஷ் சவுதா, ஆம் ஆத்மியின் அசோக் மிட்டல், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் பிரேம்சந்த் குப்தா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.