ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்
ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்
ஹோட்டலில் காதலனுடன் சிக்கிய மனைவி 12 அடி உயரத்தில் இருந்து குதித்து ஓட்டம்
ADDED : ஜூன் 18, 2025 11:34 PM

பாக்பாத் : உத்தர பிரதேசத்தில் ஹோட்டலில் காதலனுடன் தங்கியிருந்த மனைவியை கணவன் கையும் களவுமாக பிடித்ததால், 12 அடி உயர ஹோட்டல் கூரையில் இருந்து, அந்த பெண் குதித்து தப்பியோடினார்.
உ.பி.,யில் உள்ள பாக்பாத் மாவட்டத்தின் ககோர் கிராமத்தை சேர்ந்த இளைஞர், 2019ல் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார்.
அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்னரே பல ஆண்களுடன் தொடர்பு இருந்துள்ளது.
இது, திருமணத்துக்கு பின்னும் தொடர்ந்துஉள்ளது. ஆண்கள் தொடர்பை கைவிடுமாறு கண்டித்த கணவரை கொன்று விடுவதாக அந்த பெண் மிரட்டியுள்ளார்.
இதையடுத்து, கணவர் போலீசில் புகார் அளித்தார். அவர்களுக்கு கடந்த 16ல் போலீசார் கவுன்சிலிங் அளித்தனர்.
இந்நிலையில், அன்று பிற்பகலில் காதலன் சோபித்துடன் அந்த பெண் பைக்கில் ஹோட்டலுக்கு சென்றதாக கணவர் போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து கணவர் மற்றும் மாமியார் அந்த பெண்ணை தேடி பருட் நகரில் உள்ள ஹோட்டலுக்கு சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், ஹோட்டலின் மேல், 12 அடி உயரத்தில் உள்ள கூரையில் இருந்து குதித்து தப்பி சென்றார். அந்த பெண் கூரையில் இருந்து குதித்து தப்பும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதையடுத்து, காதலன் சோபித்தை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் ஹோட்டல் உரிமையாளரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கிடையே, தன் உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதால், போலீஸ் பாதுகாப்பு தரும்படி கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.