லோக்சபாவில் ராகுல் மைக் அணைப்பா? காங்., புகார்
லோக்சபாவில் ராகுல் மைக் அணைப்பா? காங்., புகார்
லோக்சபாவில் ராகுல் மைக் அணைப்பா? காங்., புகார்
ADDED : ஜூன் 28, 2024 01:20 PM

புதுடில்லி : லோக்சபாவில் ராகுல் பேசும் போது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.
பார்லிமென்ட் இன்று கூடியதும் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஜனாதிபதி உரை மீதான தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டன.
அப்போது ராகுல் பேசியதாவது: நீட் முறைகேடு விவகாரம் முக்கியமானது என கருதுகிறோம் என்பதை நாட்டு மக்களுக்கும் மாணவர்களுக்கும் அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து சொல்ல வேண்டும். மாணவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில், லோக்சபாவில் ராகுல் பேசிக் கொண்டு இருக்கும் போது அவரது மைக் அணைக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. மேலும், இந்த செயல் மிகவும் கீழ்த்தரமானது. நீட் தேர்வு முறைகேடு குறித்து மோடி எதுவும் கூறவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.