ADDED : செப் 21, 2025 08:09 AM

தொடர்ந்து தேர்தலில் தோல்வியைத் தழுவி வரும் காங்கிரஸ், கட்சியை பலப்படுத்தவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் ஒரு முக்கிய முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இனிமேல் மக்களை சந்திப்பது, பொது நிகழ்ச்சிகள் என அனைத்திலும் சோனியா, பிரியங்கா மற்றும் ராகுல் ஒன்றாகவே பங்கேற்பராம்.
பிரியங்காவின் தொகுதியான கேரளாவின் வயநாட்டில் இந்த மூவரும் உள்ளனர். இங்கு மக்களைச் சந்தித்து வருகின்றனர். இதேபோல முக்கிய தொகுதிகளில் இந்த குடும்பம் மக்களை சந்திக்குமாம். டாக்டர்கள், வக்கில்கள் என மேல்தட்டு வர்க்கம் ஒரு பக்கம். சாலையில் கடை போடும் சிறிய வியாபாரிகள் என பலரையும் சந்திக்க முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் பாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கும் கட்சியை துாக்கி நிறுத்த முடியும் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.
இது மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும். அத்தோடு மக்களும் வரவேற்பர் என்பது காங்கிரசின் திட்டம்.