உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள்; 'டாப் 10' பட்டியல் இதோ!
உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள்; 'டாப் 10' பட்டியல் இதோ!
உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள்; 'டாப் 10' பட்டியல் இதோ!
ADDED : ஜூன் 18, 2025 02:19 PM

புதுடில்லி: 2025ம் ஆண்டில், உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் இடத்தை டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் பிடித்துள்ளது.
நடப்பு 2025ம் ஆண்டில் உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள் பட்டியலை எகனாமிஸ்ட் இதழின் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) வெளியிட்டுள்ளது. உலக அளவில் 173 நகரங்களில் ஆய்வு நடத்தி, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான 'டாப் 10' நகரங்கள் பின்வருமாறு:
* கோபன்ஹேகன், டென்மார்க்
* வியன்னா, ஆஸ்திரியா
* சூரிச், சுவிட்சர்லாந்து
* மெல்போர்ன், ஆஸ்திரேலியா.
* ஜெனீவா, சுவிட்சர்லாந்து
* சிட்னி, ஆஸ்திரேலியா,
* ஒசாகா, ஜப்பான்
* ஆக்லாந்து, நியூசிலாந்து.
* அடிலெய்டு, ஆஸ்திரேலியா
* வான்கூவர், கனடா
இந்தப் பட்டியலில் கடைசி வரிசையில் இடம் பெற்றுள்ள நகரங்கள்;
வங்கதேச தலைநகர் டாக்கா கடைசியில் இருந்து 3வது இடத்தையும், பாகிஸ்தானின் கராச்சி மற்றும் அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ் ஆகியவை நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தையும் பிடித்தன என்பது குறிப்பிடத்தக்கது.