மத்திய அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் 'எக்ஸ்' நிறுவனம் வழக்கு
மத்திய அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் 'எக்ஸ்' நிறுவனம் வழக்கு
மத்திய அரசுக்கு எதிராக ஐகோர்ட்டில் 'எக்ஸ்' நிறுவனம் வழக்கு
ADDED : மார் 20, 2025 05:39 PM

பெங்களூரு: 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் (டுவிட்டர்), உள்ளடக்கம் மற்றும் கருத்துகளை தடுக்க மத்திய அரசு தகவல் தொழில்நுட்ப சட்டத்தை பயன்படுத்துவதாக கூறி, கர்நாடக ஐகோர்ட்டில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்து உள்ளது.
எக்ஸ் நிறுவனம் தனது மனுவில், ஐ.டி., சட்டத்தில் குறிப்பாக பிரிவு 79(3)(பி) ஆகிய பிரிவை மத்திய அரசு பயன்படு்த்துகிறது. இது, ஆன்லைனில் தடையற்ற கருத்து பரிமாற்றத்தை தடை செய்வதுடன், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு எதிராக உள்ளது. சட்டப்பிரிவு 69ஏ விதிமுறைகளை மீறி, இணையதள உள்ளடக்கத்தை தடுக்க ஐ.டி., சட்டத்தை மத்திய அரசு பயன்படுத்துகிறது எனக்கூறப்பட்டு உள்ளது.
ஐ.டி., சட்டம் 69 ஏ பிரிவின் படி, தேச பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை நீக்க உத்தரவிட அரசுக்கு அனுமதி வழங்குகிறது.
79(3)(b) சட்டப்பிரிவானது, எந்த உள்ளடக்கம் சட்டவிரோதமானது என்பதை சமூக வலைதளங்களே முடிவு செய்ய அனுமதி வழங்குகிறது. இதனால் சட்டரீதியிலான பிரச்னைகள் அல்லது பின்டைவை சந்திக்க நேரிடுவதாக சமூக வலைதள நிறுவனங்கள் கூறுகின்றன.