மே 28ல் கேரளாவுக்கு வாகனங்கள் போகாது: கோவையில் வைகோ பேட்டி
மே 28ல் கேரளாவுக்கு வாகனங்கள் போகாது: கோவையில் வைகோ பேட்டி
மே 28ல் கேரளாவுக்கு வாகனங்கள் போகாது: கோவையில் வைகோ பேட்டி

கோவை:"முல்லை பெரியாறு அணைப் பிரச்னையில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் கேரள அரசின் செயலை, அம்மாநில மக்கள் உணர வேண்டும் என்பதற்காகவே, கேரளா செல்லும் 13 சாலைகளில் வாகன மறிப்பு போராட்டம் நடத்தப்படுகிறது' என, கோவையில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
கோவை, திருப்பூர் மாவட்ட மக்களை சந்திக்கும் வகையில், மறுமலர்ச்சி கொடிப் பயணத்தை ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ நேற்று மாலை இருகூரில் துவக்கினார்.அதற்கு முன், கோவையில் அவர் அளித்த பேட்டி:முல்லை பெரியாறு அணைப் பிரச்னையில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிந்தும், தமிழக அரசு அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.நிலநடுக்கத்தையே தாங்கும் நிலையில் கட்டப்பட்டுள்ள முல்லை பெரியாறு அணைக்கு எவ்வித சேதமும் ஏற்படாது.
முல்லை பெரியாறு நீர்மட்டத்தை உயர்த்தாத காரணத்தால், தென் தமிழகத்தில் 38 ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக மாறியுள்ளது. விவசாயம் பாதித்ததால், இதுவரை 3,900 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.கேரள மாநிலத்துக்கு, தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களையும் தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மே 28ல், கேரளா செல்லும் சாலைகளில் வாகன மறிப்பு போராட்டம் நடக்கிறது.இவ்வாறு வைகோ தெரிவித்தார்.