தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பிசினஸ் அனலிட்டிக்ஸ்

பிசினஸ் அனலிட்டிக்ஸ்

பிசினஸ் அனலிட்டிக்ஸ்


பிப் 07, 2022 12:00 AM

பிப் 07, 2022 12:00 AM

Follow on GoogleFavourite on Google

பிப் 07, 2022 12:00 AM பிப் 07, 2022 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'பிசினஸ் அனலிஸ்ட்’களுக்குகான தேவை அதிகரித்துவரும் சூழலில், பிசினஸ் அனலிட்டிக்ஸ், டேட்டா சயின்ஸ் சார்ந்த படிப்புகளை படிக்க இன்றைய இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது! 
முக்கியத்துவம்: 
இதனை உணர்ந்த ஏராளமான முன்னணி கல்வி நிறுவனங்கள் பிசினஸ் அனலிட்டிக்ஸ் சார்ந்த குறுகியகால, சான்றிதழ், டிப்ளமா மற்றும் முதுநிலை டிப்ளமா என பல்வேறு நிலைகளில் படிப்புகளை வழங்குகின்றன.
அந்தவகையில், இந்தியன் ஸ்டேடிஸ்டிக்கல் இன்ஸ்டிடியூட்- கொல்கத்தா, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - காரக்பூர் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் - கொல்கத்தா ஆகிய நாட்டின் மூன்று தலைசிறந்த கல்வி நிறுவனங்கள் இணைந்து போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பிசினஸ் அனலிட்டிக்ஸ் - பி.ஜி.டி.பி.ஏ., எனும் இரண்டு ஆண்டுகள் கொண்ட முதுநிலை டிப்ளமா படிப்பை வழங்குகின்றன.
இப்படிப்பை படிக்கும் மாணவர்கள், ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் தலா ஒரு செமஸ்டர் காலம் வீதம் மூன்று செமஸ்டர்களில் துறை சார்ந்த கல்வி மேற்கொள்வர். இறுதி மற்றும் நான்காவது செமஸ்டர் காலத்தில், தொழில் நிறுவனங்களில் நேரடியாக இன்டர்ன்ஷிப் மற்றும் புராஜெக்ட் மேற்கொள்வர். 
விண்ணப்பிக்கும் முறை:
https://gateoffice.iitkgp.ac.in/pgdba2022/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிப்பிற்கான கல்வி கட்டணமாக 24 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
எதிர்காலம்:
இப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் மாணவர்கள் துறை சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறலாம். உயர்கல்வி மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் தொடர்ந்து பிஎச்.டி., அல்லது இதர மேம்பட்ட ஆய்வுகளைத் தொடரலாம்.
தகுதிகள்:
பி.டெக்., பி.இ., எம்.எஸ்சி., எம்காம்., போன்ற படிப்புகள் அல்லது அதற்கு இணையாக, குறிப்பிட்ட துறைகளில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., / எஸ்.டி., / மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. 
தேர்வு செய்யப்படும் முறை:
கம்ப்யூட்டர் வாயிலான தகுதித்தேர்வு, நேர்முகத் தேர்வு, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். சென்னை, கோவை, பெங்களூரு, கொல்கத்தா, எர்ணாகுளம், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், புதுடில்லி, மும்பை உட்பட 41 நகரங்களில் தகுதித்தேர்வு நடைபெறும்.
விபரங்களுக்கு:
www.pgdba.iitkgp.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us