தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/கிரேட் உதவித்தொகை - 2022

கிரேட் உதவித்தொகை - 2022

கிரேட் உதவித்தொகை - 2022


ஏப் 04, 2022 12:00 AM

ஏப் 04, 2022 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 04, 2022 12:00 AM ஏப் 04, 2022 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய மாணவர்கள் யு.கே., கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி மேற்கொள்வதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது, ’கிரேட் ஸ்காலர்ஷிப்’!
இந்த திட்டத்தை பயன்படுத்தி யு.கே.,வில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் இந்திய மாணவர்களால், பல்வேறு துறைகளில், ஓர் ஆண்டு முதுநிலை படிப்பை பெறலாம். இதற்காக குறைந்தது 10 ஆயிரம் யூரோக்கள் கல்விக்கட்டணமாக வழங்கப்படுகிறது. எனினும், பல்கலைக்கழகத்திற்கு ஏற்ப உதவித்தொகை மாறுபடுகிறது.
தகுதிகள்:

இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். யு.கே.,வில் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்வதற்குரிய கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகை திட்டத்தில் பங்குபெறும் கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் மாணவர் சேர்க்கையை பெற வேண்டும். யு.கே., உயர்கல்வி நிறுவனங்கள் வரையறுத்துள்ள ஆங்கில புலமையை பெற்றிருப்பதும் அவசியம்.
பங்குபெறும் பல்கலைக்கழகங்கள்:

பிஷப் க்ரோசெட்டெஸ்டே பல்கலைக்கழகம்கிரான்பீல்ட் பல்கலைக்கழகம்எடின்பர்க் நேப்பியர் பல்கலைக்கழகம்பால்மவுத்ட் பல்கலைக்கழகம்கோல்ட்ஸ்மித்ஸ், லண்டன் பல்கலைக்கழகம்கீலே பல்கலைக்கழகம்நியூகேஷல் பல்கலைக்கழகம்குயின்ஸ் பல்கலைக்கழகம்ராபர்ட் கார்டன் பல்கலைக்கழகம்ஷெபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம்ராயல் வேளாண் பல்கலைக்கழகம்டிரினிட்டி லபன் கன்சர்வேடியர் ஆப் மியூசிக் மற்றும் டான்ஸ்டெர்பி பல்கலைக்கழகம்கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம்கென்ட் பல்கலைக்கழகம்மான்செஸ்டர் பல்கலைக்கழகம்பிளைமவுத் பல்கலைக்கழகம்புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம்சவுத்தம்ப்டன் பல்கலைக்கழகம்கிளஸ்கோ கலோடியன் பல்கலைக்கழகம்எடின்பர்க் பல்கலைக்கழகம்ஷப்பீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம்ரீடிங் பல்கலைக்கழகம்சூசெக்ஸ் பல்கலைக்கழகம்ஆகிய பல்கலைக்கழகங்கள் இந்திய மாணவர்களுக்கு 'கிரேட் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தில் உதவித்தொகை வழங்குகின்றன.
விண்ணப்பிக்கும் முறை: 

பல்கலைக்கழக இணையதளத்தின் ஸ்காலர்ஷிப் பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி மாணவர்கள் நேரடியாக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 

உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு பல்கலைக்கழகத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது.
விபரங்களுக்கு: 

https://study-uk.britishcouncil.org/scholarships/great-scholarships/india

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us