தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்

இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்


ஏப் 29, 2022 12:00 AM

ஏப் 29, 2022 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஏப் 29, 2022 12:00 AM ஏப் 29, 2022 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கப்பல்துறை அமைச்சகத்தின் கீழ், கடந்த 2008ம் ஆண்டு சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.
நோக்கம்:
கடல்சார்ந்த வரலாறு, சட்டம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அவை சார்ந்த பிரிவுகளில் படிப்புகள், பயிற்சி மற்றும் ஆராய்ச்சி வழங்குவதை பிரதான நோக்கங்களாகக் கொண்டு இப்பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
கல்வி வளாகங்கள்:
நவி மும்பை, மும்பை துறைமுகம், கொல்கத்தா, விசாகப்பட்டினம், சென்னை, கொச்சி ஆகிய ஆறு இடங்களில் இப்பல்கலைக்கழகத்தின் வளாகங்கள் செயல்படுகின்றன. இவை தவிர, நாடு முழுவதும் 17 கல்வி நிறுவனங்கள் இப்பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்படுவதும் குறிப்பிடத்தக்கது.
பல்கலை வழங்கும் படிப்புகள்:


இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.டெக்., - மரைன் இன்ஜினியரிங்பி.டெக்., - நேவல் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்பி.எஸ்சி., - நாட்டிக்கல் சயின்ஸ்பி.பி.ஏ., - லாஜிஸ்டிக்ஸ், ரீடெயிலிங் மற்றும் இ-காமர்ஸ்பி.எஸ்சி., - ஷிப் பில்டிங் மற்றும் ரிப்பேர்
முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.டெக்., - நேவல் ஆர்கிடெக்ச்சர் மற்றும் ஓசன் இன்ஜினியரிங்எம்.டெக்., - டிரெட்ஜிங் மற்றும் ஹார்பர் இன்ஜினியரிங்எம்.டெக்., - மரைன் இன்ஜினியரிங் மற்றும் மேனேஜ்மெண்ட்எம்.பி.ஏ., - இன்டர்நேஷனல் டிரான்ஸ்போர்டேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட்எம்.பி.ஏ., - போர்ட் மற்றும் ஷிப்பிங் மேனேஜ்மெண்ட்
டிப்ளமா படிப்புகள்: 
டி.என்.எஸ்., - டிப்ளமா இன் நாட்டிக்கல் சயின்ஸ்பி.ஜி.டி.எம்.இ., - போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மரைன் இன்ஜினியரிங்
ஆராய்ச்சி படிப்புகள்:
பிஎச்.டி.,எம்.எஸ்., - ரிசர்ச்
தகுதிகள்:
படிப்பிற்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். எனினும் பொதுவாக, பி.டெக்., பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுடன் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உடல்தகுதியும், வயதுவரம்பும் உண்டு.
சேர்க்கை முறை:
ஐ.எம்.யு.,-சி.இ.டி., எனும் பொது நுழைவுத்தேர்வு அடிப்படையில் இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகங்களில் வழங்கப்படும் பி.பி.ஏ., படிப்புகள் தவிர பிற படிப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகின்றன. 
தேர்வு மையங்கள்:
கம்ப்யூட்டர் வாயிலாக நடைபெறும் இந்நுழைவுத்தேர்வுக்கான மையங்கள், சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், பெங்களூரு உட்பட 84 நகரங்களில் அமைக்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
மே 16
நுழைவுத்தேர்வு நாள்:
மே 29
விபரங்களுக்கு:
www.imu.edu.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us