தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/பேக்கேஜிங் படிப்புகள்

பேக்கேஜிங் படிப்புகள்

பேக்கேஜிங் படிப்புகள்


மே 31, 2022 12:00 AM

மே 31, 2022 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 31, 2022 12:00 AM மே 31, 2022 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மத்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. 
வழங்கப்படும் படிப்புகள்:

முதுநிலை பட்டப்படிப்புகள்:

எம்.எஸ்சி., - பேக்கேஜிங் டெக்னாலஜி
அங்கீகரிக்கும் பல்கலைக்கழகம்:
ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஐதராபாத்
கால அளவு:
2 ஆண்டுகள்
வளாகம்:
ஐதராபாத்
தகுதிகள்:
பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளில் 4 ஆண்டு கால முழுநேர இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


எம்.எஸ்சி., - பேக்கேஜிங் டெக்னாலஜி

அங்கீகரிக்கும் பல்கலைக்கழகம்: குரு கோபிந்த் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம், டில்லி

கால அளவு:
2 ஆண்டுகள்

வளாகம்:
டில்லி

கல்வித்தகுதி:
இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முதன்மை அல்லது இரண்டாம் பாடமாகக் கொண்ட மூன்று ஆண்டு பொறியியல் / தொழிநுட்பம் / அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முதுநிலை டிப்ளமா படிப்பு: 


பி.ஜி.டி.பி., - போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பேக்கேஜிங்

கால அளவு:
2 ஆண்டுகள்
வளாகங்கள்:
மும்பை மற்றும் கொல்கத்தா

கல்வித்தகுதி:
இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை முதன்மை அல்லது இரண்டாம் பாடமாகக் கொண்ட மூன்று ஆண்டு பொறியியல் / தொழிநுட்பம் / அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சான்றிதழ் படிப்பு: 
சி.பி.இ., - சர்ட்டிபைடு பேக்கேஜிங் இன்ஜினியர்
கால அளவு:
ஓர் ஆண்டு

வளாகம்:
சென்னை
கல்வித்தகுதி:
யு.ஜி.சி., அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பி.இ., அல்லது பி.டெக்., படிப்பில் தேர்ச்சி
தேர்வு முறை:
சான்றிதழ் படிப்பு தவிர, பிற அனைத்து படிப்புகளும் கல்வி நிறுவனத்தின் ஐ.ஐ.பி.சி.இ.டி., எனும் பிரத்யேக நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
விபரங்களுக்கு:
https://www.iip-in.com/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us