தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/மீன்வள படிப்புகள்

மீன்வள படிப்புகள்

மீன்வள படிப்புகள்


ஆக 02, 2022 12:00 AM

ஆக 02, 2022 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஆக 02, 2022 12:00 AM ஆக 02, 2022 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் மீன்வள படிப்புகளுக்கு என ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக பல்கலைக்கழகம், மீன்வளம் சார்ந்த உயர்தர கல்வி, ஆராய்ச்சி, ஊட்டச்சத்து மிக்க உணவு பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
அறிமுகம்
நாகப்பட்டினத்தில் செயல்படும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பத்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. மீன்வளம் சார்ந்து பல்வேறு இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகள் இந்த நிறுவனங்களில் வழங்கப்படுகின்றன. 
தற்போது, இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு 12ம் வகுப்பில் அறிவியல் சார்ந்த பாடங்களை படித்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
வழங்கப்படும் படிப்புகள்:
பி.எப்.எஸ்சி., - பிஷரீஸ் சயின்ஸ்பி.டெக்., - பிஷரீஸ் இன்ஜினியரிங்பி.டெக்., - எனர்ஜி அண்டு என்விரான்மெண்டல் இன்ஜினியரிங்பி.டெக்., - பயோடெக்னலாஜிபி.டெக்., - புட் இன்ஜினியரிங்பி.பி.ஏ., - பிஷரீஸ்  எண்டர்பிரைசஸ் மேனேஜ்மெண்ட்பி.வொக்., - இண்டஸ்ட்ரியல் பிஷ் புராசெசிங் டெக்னாலஜிபி.வொக்., - இண்டஸ்ட்ரியல் அக்குவாகல்ச்சர்பி.வொக்., - இண்டஸ்ட்ரியல் பிஷ்ஷிங் டெக்னாலஜி
கல்வி வளாகங்கள்:
1. பிஷரீஸ் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - தூத்துக்குடி2. டாக்டர். எம்.ஜி.ஆர். பிஷரீஸ் காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - திருவள்ளூர்3. டாக்டர். எம்.ஜி.ஆர். பிஷரீஸ்  காலேஜ் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - நாகப்பட்டினம்4. காலேஜ் ஆப் பிஷரீஸ் இன்ஜினியரிங் - நாகப்பட்டினம்5. இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் பயோடெக்னாலஜி - சென்னை6. டி.என்.ஜே.எப்.யூ., பிஷரீஸ் பிசினஸ் ஸ்கூல் - சென்னை7. காலேஜ் ஆப் பிஷ் நியூட்டிரிஷன் அண்டு புட் டெக்னாலஜி - சென்னை8. பாராபுரொபஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பிஷரீஸ் டெக்னாலஜி - சென்னை9. பாராபுரொபஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அக்குவாகல்ச்சர் டெக்னாலஜி - சென்னை10. பிஷரீஸ் டிரைனிங் இன்ஸ்டிடியூட் - ராமநாதபுரம்
விண்ணப்பிக்கும் முறை:
www.tnjfu.ac.in/ugadmissions.php எனும் பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 
முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள், தமிழக அரசு பள்ளிகளில் படித்தவர்கள், மீனவர் குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் ஆகியோருக்கென சிறப்பு இட ஒதுக்கீடு உண்டு. வெளிநாடுவாழ் இந்தியர்களும் பி.எப்.எஸ்சி., மற்றும் பி.டெக்.,- பிஷரீஸ் இன்ஜினியரிங் படிப்புகளுக்கு சேர்க்கை பெறலாம்.
விபரங்களுக்கு:
 இ-மெயில்:
ugadmission@tnjfu.ac.inஇணையதளம்:
www.tnjfu.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us