தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகை

என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகை

என்.எம்.எம்.எஸ்., உதவித்தொகை


ஜன 06, 2023 12:00 AM

ஜன 06, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜன 06, 2023 12:00 AM ஜன 06, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு அங்கீகாரம் பெற்ற அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். 
ஒரு லட்சம் மாணவர்கள்:
மத்திய அரசின் இந்த ‘நேஷனல் மீன்ஸ் -கம் -மெரிட்’ உதவித்தொகை நாடு முழுவதிலும் ஒரு லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 6 ஆயிரத்து 695 மாணவர்களுக்கும், புதுச்சேரியில் 125 மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசத்தின் விதிமுறைப்படி, பல்வேறு தரப்பினருக்கு இட ஒதுக்கீடும் உண்டு.
தகுதிகள்:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் 8ம் வகுப்பு மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். ஏழாம் வகுப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் தளர்வு உண்டு. கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவகர் நவோதயா வித்யாலாயா பள்ளி மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி இல்லை. 
அதேபோல், தனியார் பள்ளி மாணவர்களுக்கும், அரசு மற்றும் அரசு உதவிபெறம் பள்ளிகளில் தங்கி படிக்கும் படிக்கும் மாணவர்களுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
உதவித்தொகை விபரம்:
மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது அதிகபட்சம் 4 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது. 
தேர்வு செய்யப்படும் முறை:
மாநில அளவில் நடத்தப்படும் ‘மெண்டல் எபிலிட்டி டெஸ்ட்’ மற்றும் ’ஸ்காலிஸ்டிக் ஆப்டிடியூட் டெஸ்ட்’ ஆகிய தேர்வுகளின் வாயிலாக தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். 
விண்ணப்பிக்கும் முறை: 
https://dge1.tn.gov.in/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.50யும் சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து வட்டார அளவில் இத்தேர்விற்கான மையங்கள் அமைக்கப்படுகின்றன.
விபரங்களுக்கு:
https://dge1.tn.gov.in/

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us