தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/சென்னை கணித நிறுவனம்

சென்னை கணித நிறுவனம்

சென்னை கணித நிறுவனம்


மார் 07, 2023 12:00 AM

மார் 07, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மார் 07, 2023 12:00 AM மார் 07, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கணிதம் சார்ந்த படிப்புகளுக்கும், ஆய்வுகளுக்கும் தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனம், ’சென்னை மேத்மெடிக்கல் இன்ஸ்டிடியூட்’!

முக்கியத்துவம்
கடந்த 1989ம் ஆண்டு நிறுவப்பட்ட இக்கல்வி நிறுவனம் 1996ம் ஆண்டு தன்னாட்சி அங்கீகாரமும், 2006ம் ஆண்டு பல்கலைக்கழக அங்கீகாரமும் பெற்றது. தற்போது சென்னை சிறுசேரியில் செயல்படும் இக்கல்வி நிறுவனத்தில், நாட்டிலுள்ள பல்வேறு புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களை சேர்ந்த பேராசிரியர்கள் ’விசிட்டிங்’ ஆசிரியர்களாக உள்ளனர்.
வழங்கப்படும் படிப்புகள்
பி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் கணினி அறிவியல்  - 3 ஆண்டுகள் பி.எஸ்சி., (ஹானர்ஸ்) - கணிதம் மற்றும் இயற்பியல் - 3 ஆண்டுகள்எம்.எஸ்சி., - கணிதம் - 2 ஆண்டுகள்எம்.எஸ்சி., - கணினி அறிவியல் - 2 ஆண்டுகள்எம்.எஸ்சி., - தரவு அறிவியல் - 2 ஆண்டுகள்பிஎச்.டி., - கணிதம்பிஎச்.டி., - கணினி அறிவியல்பிஎச்.டி., - இயற்பியல் 
தகுதிகள்: 
பி.எஸ்சி., படிப்புகளுக்கு 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.எஸ்சி., படிப்புகளில் சேர உரிய பிரிவில் இளநிலை பட்டப்படிப்பும், பிஎச்.டி., படிப்புகளுக்கு உரிய துறையில் முதுநிலை பட்டப்படிப்பும் படித்திருக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை முறை: 
பொதுவாக, கணிதத்துறையில் பிஎச்.டி., படிக்க என்.பி.எச்.எம்., தேர்வு அல்லது சி.எம்.ஐ., நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இதர பிரிவுகளில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ’ஜாயின்ட் என்ட்ரன்ஸ் ஸ்கீரினிங் டெஸ்ட் - ஜெஸ்ட்’ வாயிலாகவும், பிற படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிரத்யேக நுழைவுத்தேர்வு வாயிலாகவும் நடைபெறுகிறது. 
நுழைவுத் தேர்வு மையங்கள்: 
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பெங்களூரு, கொல்கத்தா, புதுடில்லி, மும்பை, திருவனந்தபுரம், ஹைதராபாத் உட்பட நாடு முழுவதிலும் பல்வேறு நகரங்களில் நுழைவுத்  தேர்வு நடைபெறுகிறது.
உதவித்தொகை: 
தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள மாணவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு செமஸ்டரிலும் மாணவர்களின் கல்வி செயல்திறனைப் பொறுத்து, உதவித்தொகை தொடர்ந்து வழங்குவது குறித்து முடிவு செய்யப்படுகிறது. 
விபரங்களுக்கு:
www.cmi.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us