தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/இன்ஜினியரிங் அட்மிஷன் - 2023

இன்ஜினியரிங் அட்மிஷன் - 2023

இன்ஜினியரிங் அட்மிஷன் - 2023


மே 19, 2023 12:00 AM

மே 19, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

மே 19, 2023 12:00 AM மே 19, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.இ., பி.டெக்., மற்றும் பி.ஆர்க்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆன்லைன் வாயிலாக நடத்துகிறது.

கல்வி நிறுவனங்கள்:
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்கள் ஆகியவை 'தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை - டி.என்.இ.ஏ.,’ கலந்தாய்வு மூலம் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படுகின்றன.
இவைதவிர, மத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம் - காரைக்குடி, மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனம் - சென்னை மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி - சேலம் ஆகிய மத்திய அரசு கல்வி நிறுவனங்களால் ஒப்படைக்கப்பட்டுள்ள இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
படிப்புகள் மற்றும் கால அளவு:
பி.இ., மற்றும் பி.டெக்., படிப்பு - 8 செமஸ்டர்கள் வீதம் மொத்தம் நான்கு ஆண்டுகள்பி.இ., (சாண்ட்விச்), படிப்பு - 10 செமஸ்டர்கள் வீதம் மொத்தம் ஐந்து ஆண்டுகள்பி.ஆர்க்., - 5 ஆண்டுகள்
கல்வித் தகுதி:
12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடங்களாக பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில தொழில்பிரிவு மாணவர்களும் குறிப்பிட்ட பொறியல் படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2வில் குறைந்தது 45 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
தேவைப்படும் சான்றிதழ்கள்:
பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது அதற்கு இணையான கல்வி சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் தேவைக்கு ஏற்ப இதர சிறப்பு சான்றிதழ்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tneaonline.org எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் அல்லது டி.எப்.சி., மையங்களுக்கு நேரடியாக சென்றும் அலுவலர்களின் உதவியுடனும் விண்ணப்பிக்கலாம். இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு கணக்கிடப்படும், ‘கட்-ஆப்’ மதிப்பெண் அடிப்படையில் ‘ரேங்க்’ பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே கலந்தாய்வில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்ய முடியும்.
விபரங்களுக்கு: 
இணையதளம்: www.tneaonline.orgதொலைபேசி: 1800 425 0110,  044-22351014, 22351015இ-மெயில்: tneacare@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us