தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/கட்டுரைகள்/தாய்லாந்து உதவித்தொகை

தாய்லாந்து உதவித்தொகை

தாய்லாந்து உதவித்தொகை


ஜூலை 29, 2023 12:00 AM

ஜூலை 29, 2023 12:00 AM

Follow on GoogleFavourite on Google

ஜூலை 29, 2023 12:00 AM ஜூலை 29, 2023 12:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாய்லாந்தில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு, சுலாபார்ன் கிரேஜுவேட் இன்ஸ்டிடியூட் உதவித்தொகை வழங்குகிறது. 
உதவித்தொகை எண்ணிக்கை:
மொத்தம் 15 உதவித்தொகைகளை இந்நிறுவனம் வழங்குகிறது என்றபோதிலும், அவற்றில் இந்திய மாணவர்களுக்காக 5 உதவித்தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதிகள்:
30 வயதுக்குள் இருத்தல் வேண்டும். மொத்தம் 10 புள்ளி அளவு கொண்ட சி.ஜி.பி.ஏ.,வில், குறைந்தது 6.88 உடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் ஆய்வக ஆராய்ச்சியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டோபல் அல்லது ஐ.இ.எல்.டி.எஸ்., ஆகிய அங்கீகரிக்கப்பட்ட மொழி புலமை தேர்வில் போதிய மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். படிப்பை மேற்கொள்வதற்கான நோக்கத்தை விளக்கும் வகையிலான விளக்கக் கடிதம் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்குள் இருத்தல் வேண்டும்.
தகுதியுள்ள துறைகள்:
வேதியியல், உயிரியல், உயிரியல் அறிவியல், மூலக்கூறு உயிரியல், சுற்றுச்சூழல் அறிவியல், மருத்துவம், மருத்துவ தொழில்நுட்பம், மருந்தகம் அல்லது மருந்து அறிவியல் மட்டுமின்றி, இதர துறைகளை சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். 
உதவித்தொகை வழங்கப்படும் துறைகள்:
* பயன்பாட்டு உயிரியல் அறிவியல்: சுற்றுச்சூழல் ஆரோக்கியம்* சுற்றுச்சூழல் நச்சுயியல்* ரசாயன அறிவியல்
உதவித்தொகை:
கல்விக் கட்டணம் மற்றும் பிற கல்விக் கட்டணங்கள், விமான கட்டணம், விசா கட்டணம், தங்குமிடம், மாதாந்திர உதவித்தொகை, புத்தக செலவினங்கள், சுகாதார காப்பீடு ஆகியவை இந்த உதவித்தொகை திட்டத்தில் அடங்கும்.
உதவித்தொகை காலம்:
6 வாரகால புத்துணர்ச்சி படிப்பு மற்றும் 2 ஆண்டுகால முதுநிலை பட்டப்படிப்பு. 

விபரங்களுக்கு: 
இணையதளம்: www.education.gov.inமின்னஞ்சல்:  ramamurthy.edu@nic.in தொலைபேசி:  011 – 26172492

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us