/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வால்பாறையில் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறிவால்பாறையில் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
வால்பாறையில் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
வால்பாறையில் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
வால்பாறையில் போக்குவரத்து நெரிசலால் தவிப்பு மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி
வால்பாறை : வால்பாறை டவுன் பகுதியில் மாலை நேரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.வால்பாறை தாலுகாவில் 1.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் காந்திசிலை வளாகத்தில் மாலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி முடிந்த பின்னர் கூட்ட நெரிசல் அதிகமாகிறது. குறுகலான இடத்தில் பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டுள்ளதால் பெரும்பாலான மாணவர்கள், பயணிகள் வெளியில் நிற்கவேண்டியுள்ளது.பஸ்ஸ்டாண்டில் பஸ் வரும் போது மாணவர்கள் அடித்து,பிடித்து ஓடிப்போய் ஏறுகின்றனர். இதனால் சிறுவயது மாணவர்கள் பஸ் ஏற முடியாமல் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். சில நேரங்களில் பஸ் திரும்பும் போது சீட் பிடிக்கும் அவசரத்தில் ஓடும் மாணவர்கள், விபத்துள்ளாகின்றனர். இதனால் மாலை நேரத்தில் காந்திசிலை வளாத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற் பட்டு மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதை தடுக்க வேண்டிய போலீசாரும், சம்பந்தப்பட்ட துறையினரும் கண்டுகொள்வதில்லை. இதனால் வால்பாறை காந்திசிலை வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவுள்ளது.பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கூறியதாவது:மாலை நேரத்தில் மட்டும் காந்திசிலை வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. இதைக்கட்டுப்படுத்த போலீசாரும் எந்த ஒரு நடவடிக் கையும் எடுப்பதில்லை. சம்பந்தப்பட்ட பள்ளியின் சார்பில் ஒரு ஆசிரியர் வீதம் மாலை நேரத்தில் மட்டும் மாணவர்களை பாதுகாப்பாக பஸ்சில் பயணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக போலீசாரும், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களும் இப்பணியில் ஈடுபடவேண்டும் என்றனர்.
வால்பாறை டவுன் மத்தியப்பகுதியில் காந்தி சிலை வளாகம் குறுகலான இடத்தில் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் வலம் வருவதாலும், மாலை நேரத்தில் மாணவர்களின் கூட்டம் அலை மோதுவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.விதிமுறைகளை மீறி சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்களால் மாணவர்களும், பொதுமக்களும் ரோட்டில் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதனால் பல்வேறு சமயங்களில்விபத்து ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர்.வால்பாறை டவுன் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கூட்டம் நடத்தி, பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்பது வால்பாறை மக்களின் எதிர்பார்ப்பு.