Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/வெங்காய விளைச்சல் குறைவு

வெங்காய விளைச்சல் குறைவு

வெங்காய விளைச்சல் குறைவு

வெங்காய விளைச்சல் குறைவு

ADDED : ஆக 02, 2010 12:38 AM


Google News

உடுமலை:துல்லிய பண்ணைத் திட்டத்தில் உரிய நேரத்தில் நீர் வழி உரங்கள் வினியோகிக்க படாததால் ஏக்கருக்கு பல டன் விளைச்சல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.விவசாய சாகுபடியில் குறைந்த தண்ணீர், இடுபொருட்கள் செலவை குறைத்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு துல்லிய பண்ணை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.தோட்டக்கலைத்துறை சார்பில் வெங்காயம், தக்காளி உட்பட காய்கறி சாகுபடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வேளாண் விரிவாக்க மைய கட்டுப்பாட்டு பகுதியில் செயல்விளக்க பண்ணைகள் அமைக்க துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

ஒரு விவசாயிக்கு ஒரு எக்டேர் பண்ணை அமைக்க சொட்டு நீர் கருவிகள், விதைகள், உரம் உட்பட இடுபொருட்கள், நீர் வழி உரம் அளிக்கும் கருவிகள் ஏக்கருக்கு 25 ஆயிரம் வீதம் மானியத்தில் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.குடிமங்கலம் ஒன்றியத்தில் இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 20 விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த சீசனில் துல்லிய பண்ணை திட்டத்தில் விவசாயிகள் அதிகளவு சின்ன வெங்காயம் பயிரிட்டனர். சொட்டு நீர் மற்றும் விதைகள் மானியத்தில் வழங்கப்பட்ட நிலையில் சாகுபடி முடியும் வரை நீர் வழி உரங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.நீர் வழி உரங்களை வினியோகிக்க விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.இவ்வகை உரங்கள் வெளிமார்க்கெட்டிலும் கிடைக்காததால் பயிர்களுக்கு குறித்த நேரத்தில் உரமிட முடியவில்லை. இதனால், விளைச்சல் பாதியாக குறைந்தது. சின்னவெங்காயத்தை அறுவடை செய்துள்ள விவசாயிகள் தொடர்ந்து துல்லிய பண்ணை திட்டத்தில் வேறு பயிர்களை பயிரிட்டுள்ளனர். இந்த சாகுபடிக்காவது நீர் வழி உரங்களை தோட்டக்கலைத்துறையினர் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'துல்லிய பண்ணை திட்டத்தில் சாகுபடி செய்வதால் தண்ணீர் தேவை குறைந்து, களைகள் அதிகம் முளைப்பதில்லை. இதனால், தோட்டக்கலைத்துறை மானியத்தில் சின்ன வெங்காயம் பயிரிட்டோம். நீர் வழி உரங்கள் குறித்த நேரத்தில் கிடைக்காததால் ஏக்கருக்கு 5 டன் வரை விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், பிற விவசாயிகளுக்கும் துல்லிய பண்ணை திட்டம் குறித்த அதிருப்தி உருவாகும் நிலை உள்ளது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்', என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us