திருபுதிய கீழ்சாந்திகள் நியமனம் இன்று குருவாயூரில் நடக்கிறது
திருபுதிய கீழ்சாந்திகள் நியமனம் இன்று குருவாயூரில் நடக்கிறது
திருபுதிய கீழ்சாந்திகள் நியமனம் இன்று குருவாயூரில் நடக்கிறது
ADDED : ஜூலை 31, 2010 12:09 AM
குருவாயூர்: புதிய இரு கீழ்சாந்திகள் (உதவி அர்ச்சகர்கள்) இன்று மாலை குருவாயூரில் பொறுப்பேற்க உள்ளனர்.
இவர்களது பணி காலம் ஆறு மாதம். கேரளாவில் பிரபலமான குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) மற்றும் கீழ்சாந்திகள் (மேல்சாந்திக்கு கீழ் பணியாற்றும் உதவி அர்ச்சகர்கள்) இறை பணியில் ஈடுபட்டுள்ளனர். இக்கோவிலில் 140 கீழ்சாந்திகள் பணியாற்றி வருகின்றனர். தற்போது மாதவன் நம்பூதிரி மற்றும் கேசவன் நம்பூதிரி ஆகியோரது பதவிக் காலம் முடிவடைவதை ஒட்டி, புதிய கீழ்சாந்திகளாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் இன்று மாலை பொறுப்பேற்க உள்ளனர். கோவிலில் கீழ்சாந்திகளின் பணிகளாக, நைவேத்தியங்கள் தயாரிப்பது, சீவேலி (உற்சவ மூர்த்தி யானை மீது எழுந்தருளும் நிகழ்ச்சி)க்கான பணிகள், சந்தனக் கட்டைகளில் இருந்து சந்தனம் அரைப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.