/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தாராபுரத்தில் அரசு கல்லூரி அமையுமா:மாணவ, மாணவியர் எதிர்பார்ப்புதாராபுரத்தில் அரசு கல்லூரி அமையுமா:மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு
தாராபுரத்தில் அரசு கல்லூரி அமையுமா:மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு
தாராபுரத்தில் அரசு கல்லூரி அமையுமா:மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு
தாராபுரத்தில் அரசு கல்லூரி அமையுமா:மாணவ, மாணவியர் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 02, 2010 12:36 AM
திருப்பூர்:தாராபுரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டுமென, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்வி வளர்ச்சியை அதிகரிக்கவும், ஏழை மாணவ, மாணவியரின் உயர் கல்வியை மேம்படுத்தவும் கல்வி கடன் மற்றும் முதல் பட்டதாரிக்கு சலுகை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் தமிழகத்தில் வழங்கப்படுகின்றன.
அதிக மக்கள் தொகை மற்றும் முக்கிய இடங்களில் அரசு கல்லூரிகள் அமைக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் மேல்படிப்பை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளது. இங்கு ஆயிரக் கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தொழிற்சாலைகள் அதிக அளவில் இல்லாததால், தாராபுரத்தை சேர்ந்த மக்கள் விவசாயத்தை தொழிலாக கொண்டுள்ளனர்.சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால், ஆறு, வாய்க் கால் பாசனம் குறைந்து கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்ய ஆரம்பித்தனர். இதனால், ஆயிரக் கணக்கான விவசாய கூலி தொழிலாளர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாமல், பொருளாதார ரீதியாக பின்தங்கி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.தாராபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாய கூலியாக உள்ளனர். மழையில்லாத காரணத்தால் விவசாயம் குறைந்து, ஆண்டுக்கு நான்கு மாதம் மட்டுமே விவசாய கூலி வேலை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.போதிய வருமானமின்றி இருக்கும் அப்பகுதி விவசாய மக்கள், அவர்களது குழந்தைகளை, மேல்படிப்புக்கு கோவை, பழனி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தொழில் நகரங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலையுள்ளது. வெளிமாவட்டங்களுக்கு படிக்க அனுப்பும் மாணவர்கள், குறைந்த கல்வி கட்டணத்தில் அரசு கல்லூரிகளில் பயின்றாலும், போக்குவரத்து மற்றும் விடுதிகளில் தங்கி பயில வேண்டியுள்ளதால், கூடுதல் செலவு ஏற்படு கிறது. இதனால், பெரும்பாலான பெற்றோர் உயர்படிப்புக்கு மாணவர் களை அனுமதிப்பது இல்லை.அதேபோல், மாணவியரை உள்ளூரில் பள்ளி படிப்பு முடித்து மேல் படிப்புக்கு வெளியூர் செல்ல பெற்றோர் அனுமதிப்பதில்லை. இதனால், ஆயிரக்கணக்கான மாணவியர் மேற்படிப்பை தொடராமல் படிப்பை பாதியில் நிறுத்தி விடுகின்றனர்.இந்நிலையை தவிர்க்க, தாராபுரத் தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போது மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது. தாராபுரத்தில் அரசு கல்லூரி அமைந் தால், ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர் கல்லூரி படிப் புக்காக பிற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருக்காது. இதனால், அப்பகுதியில் மேற்படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும்.