ADDED : ஆக 01, 2010 03:47 AM
அவனியாபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(28).
இவர் மீது மதுரை நகர் போலீசில் வழக்குகள் உள்ளன. மதுரை வில்லாபுரம் ஹவுசிங்போர்டில், சகோதரி வீட்டில் சில மாதங்களாக தங்கியிருந்தார். இரண்டு நாள்களுக்கு முன், ஹவுசிங்போர்டில் வீட்டிற்குள் படுத்திருந்த பெண் மீது தண்ணீர் ஊற்றியதால் தகராறு ஏற்பட்டது. இதில் காளீஸ்வரி மற்றும் தாய் சோலையம்மாள் கத்தியால் குத்தப்பட்டார். இது குறித்து ராஜேந்திரனை அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, எஸ்.ஐ., ரமணி, ஏட்டுகள் அருவகம், தமிழ்திருவாசகம், கிருஷ்ணசாமி தேடினர்.மதுரை காமராஜர்புரத்தை சேர்ந்த வேல்சாமி, நேற்று காலை ஹவுசிங்போர்டில் சென்றுகொண்டு இருந்தார். அவரை வழிமறித்த ராஜேந்திரன் கத்தியை காட்டி மாமூல் 100 ரூபாய் பறித்ததாக அவனியாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். ராஜேந்திரன் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.