/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வெடி பயன்படுத்த எதிர்ப்பு:தரைப்பாலத்தை அகற்றும் பணி நிறுத்தம்வெடி பயன்படுத்த எதிர்ப்பு:தரைப்பாலத்தை அகற்றும் பணி நிறுத்தம்
வெடி பயன்படுத்த எதிர்ப்பு:தரைப்பாலத்தை அகற்றும் பணி நிறுத்தம்
வெடி பயன்படுத்த எதிர்ப்பு:தரைப்பாலத்தை அகற்றும் பணி நிறுத்தம்
வெடி பயன்படுத்த எதிர்ப்பு:தரைப்பாலத்தை அகற்றும் பணி நிறுத்தம்
ADDED : ஜூலை 30, 2010 10:35 PM
ராஜபாளையம்: சேதமடைந்த தரைப்பாலத்தை அகற்ற வெடி வைத்தனர்.இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.ராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி போலீஸ் குடியிருப்பு செல்லும் வழியில் காமராஜர் ரோட்டில் உள்ள தரைப்பாலத்தின் நடுவே சேதமடைந்திருந்தது.
அப்பகுதியினர் தரைப்பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதன்படி நகராட்சி சார்பில் ஒப்பந்தகாரர் மூலம், பாலத்தை புதுப்பிக்கும் பணி துவங்கியது.
வழக்கமாக கான்கிரீட் தரை தளத்தை 'டிரில்லர்' மிஷின் அல்லது 'பிரேக்கிங்' மிஷினை வைத்து தான் அகற்றுவர். ஆனால், இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில், தரைப் பாலத்தில் ஆங்காங்கே துளையிட்டு வெடி பொருட் களை வைத்து உடைக்கும் பணி மேற் கொள்ளப்பட்டது. திடீரென ஏற்பட்ட வெடிச்சத்தத்தால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாலம் பாதியளவு தகர்க்கப்பட்ட நிலையில், போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.