விருதுநகர்:அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோயிலில் கம்பன் கழக 224 வது சொற்பொழிவு கூட்டம் நடந்தது.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அரு.சுந்தரம் 'ராமாயணத்தில் அருமை மிகு ஆண் பாத்திரங்கள்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். செயலாளர் காசி, வித்தியா ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் போத்திராஜ், இணை செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சத்திய சேவா சமிதி குழுவினரின் பஜனை நடந்தது.