காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை : சிதம்பரம்
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை : சிதம்பரம்
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பவில்லை : சிதம்பரம்
ADDED : ஜூலை 30, 2010 04:30 PM
புதுடில்லி : காஷ்மீரில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை என மத்திய உள் துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.
டில்லியில் அவர் இன்று நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : காஷ்மீரில் இன்னும் முற்றிலுமாக இயல்பு நிலை திரும்பவில்லை. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு எல்லா பிரிவினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறது. அங்கு பிரிவினை வாதத்தை தூண்டி விடுபவர்களுடனும் கூட பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.