திண்டலில் ரோட்டை கடக்க மக்கள் அவதி
திண்டலில் ரோட்டை கடக்க மக்கள் அவதி
திண்டலில் ரோட்டை கடக்க மக்கள் அவதி
ADDED : ஆக 01, 2010 03:47 AM
பெருந்துறை: திண்டல் மலை மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலம்.
ஈரோடு மற்றும் அதைச்சுற்றியுள்ள ஊர்களிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் திண்டலில் அமைந்துள்ள முருகன் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
திண்டல் மலை அருகில் வேளாளர் கல்வி நிறுவனங்கள், பாரதி வித்யாபவன் பள்ளி, அரசு உயர்நிலைப் பள்ளி ஆகியவை அமைந்துள்ளன. இவற்றில், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நாளுக்கு நாள் குடியிருப்புகள் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. ஈரோடு - கோவை இடையே ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
தொடர் போக்குவரத்தால், அபாயம் நிறைந்த பகுதியாக திண்டல் மாறிவிட்டது. ஏராளமான விபத்துக்கள் நடந்துள்ளன. பல முறை உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. ஈரோடு - கோவை ரோட்டை, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பொது மக்கள் பாதுகாப்பாக கடக்கும் வகையில், ரோட்டின் நடுவே கோடு வரையப்பட்டுள்ளது. இவ்வழியே மக்கள் கடக்கும் போது, வாகனங்களை இருபுறமும் நிறுத்த, போலீஸ்காரரை நியமிக்க வேண்டும். அல்லது தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.