Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மனைவியை கொலை செய்துவிட்டுநாடகமாடிய கணவன் கைது: புளியங்குடியில் பரபரப்பு

மனைவியை கொலை செய்துவிட்டுநாடகமாடிய கணவன் கைது: புளியங்குடியில் பரபரப்பு

மனைவியை கொலை செய்துவிட்டுநாடகமாடிய கணவன் கைது: புளியங்குடியில் பரபரப்பு

மனைவியை கொலை செய்துவிட்டுநாடகமாடிய கணவன் கைது: புளியங்குடியில் பரபரப்பு

ADDED : ஆக 01, 2010 03:47 AM


Google News

புளியங்குடி:புளியங்குடியில் மனைவியை அடித்து கொலை செய்து விட்டு, நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.புளியங்குடி வாலன் தெருவை சேர்ந்தவர் செல்லையா மகன் சங்கர்குரு (38).

இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ரெங்ககருப்பன் தெருவை சேர்ந்த முனியாண்டி மகள் செல்விக்கும் (24) கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பிரவின்குமார் (4) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் செல்வி திடீரென காணாமல் போனதாக அவரது தாய் சண்முகத்தாய் புளியங்குடி போலீசில் புகார் செய்தார்.போலீசார் செல்வியின் கணவன் சங்கர்குருவிடம் விசாரணை நடத்தியதில் செல்வி திருப்பூரில் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் திருப்பூர் சென்று விசாரணை செய்தனர். அவர் திருப்பூரில் இல்லை என தெரியவந்தது. இதனால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.



இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் சண்முகத்தாய் தனது மகளை கண்டுபிடித்து தருமாறு மதுரை ஐகோர்ட் கிளையில் ஆட் கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு செல்வியை நேரில் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். சங்கர்குருவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவர் செல்வியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து புளியங்குடி டிஎஸ்பி., சண்முகம் (பொறுப்பு), சிவகிரி தாசில்தார் ராஜாராம், புளியங்குடி இன்ஸ்பெக்டர் தெய்வம் சங்கர்குருவை கொலை செய்த உடலை புதைத்ததாக கூறப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நராட்சி துப்புறவு பணியாளர்கள் உதவியுடன் அதிகாரிகள் முன்னிலையில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தார்.



சங்கர்குரு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:எனது மனைவி செல்வி ஏற்கனவே பட்டப்படிப்பு படித்திருந்தார். மேற்படிப்பு படிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் திருப்பூருக்கு செல்வி வேலைக்கு சென்று விட்டாள். அங்கு வேலை செய்து கொண்டிருந்த செல்வியை மீண்டும் புளியங்குடி அழைத்து வந்தேன்.சம்பவத்தன்று 'உனது தாயார் கோட்டைமலை பகுதியில் உள்ள கிணற்றில் இருப்பதாக' கூறி செல்வியை அங்கே அழைத்து சென்றேன்.



செல்வியின் தாய் அங்கு இல்லாதது தெரிந்தவுடன் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் தொடங்கியது. இதனால் செல்வியை செங்கலால் தாக்கினேன். இதில் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்த செல்வியை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்கு திரும்பிவிட்டேன். சில நாட்கள் கழித்து சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தேன். அங்கு செல்வி இறந்து கிடந்தார். உடனே அவரது உடலை அங்கேயே பிளாஸ்டிக் பையால் மூடி, அப்பகுதியில் இருந்த ஓடை அருகே புதைத்து விட்டேன்.இவ்வாறு சங்கர்குரு தெரிவித்துள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us