/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கழிப்பிட ஒப்பந்ததாரருக்கு அபராதம்:மாநகராட்சி கமிஷனர் அதிரடிகழிப்பிட ஒப்பந்ததாரருக்கு அபராதம்:மாநகராட்சி கமிஷனர் அதிரடி
கழிப்பிட ஒப்பந்ததாரருக்கு அபராதம்:மாநகராட்சி கமிஷனர் அதிரடி
கழிப்பிட ஒப்பந்ததாரருக்கு அபராதம்:மாநகராட்சி கமிஷனர் அதிரடி
கழிப்பிட ஒப்பந்ததாரருக்கு அபராதம்:மாநகராட்சி கமிஷனர் அதிரடி
ADDED : ஆக 01, 2010 02:15 AM
கோவை:கோவை நகரில் செயல்படும் இரு மாநகராட்சி கட்டண கழிப்பிடங்களில் கமிஷனர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.கோவை மாநகராட்சி நிர்வாக அறிக்கை:கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து, மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா, கிழக்கு மண்டல உதவி கமிஷனர் லோகநாதன், நிர்வாக அலுவலர் துரைராஜ் உள்ளிட்டோர் நேற்று
ஆய்வு நடத்தினார்.ஆய்வின் முடிவில், இரு கழிப்பிடங்களிலும் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இரு கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரர்களுக்கும், கமிஷனர் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். அனைத்து கட்டண கழிப்பிட உரிமையாளர்களும் மாநகராட்சியால் நிர்ணயிக்கப்பட்டள்ள கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்களின் உரிமம் எந்தவித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும்.