தளவாய்புரம்:தளவாய்புரத்திலிருந்து முகவூர் வழியாக சேத்தூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
இதை செப்பனிட வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காத நெடுஞ்சாலைத்துறையை கண்டித்து தளவாய்புரம் பஸ் ஸ்டாண்ட் அருகே மார்க்சிஸ்ட் சார்பில் பாடை கட்டி சங்கு ஊதிப் போராட்டம் நடந்தது. செட்டியார்பட்டி நகர செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தளவாய்புரம் கிளைச் செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.