ADDED : ஜூலை 30, 2010 10:56 PM
சிவகங்கை:நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத் தினர் சிவகங்கையில் ஊர்வலம் நடத்தினர்.கடந்த ஆட்சியில் 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறைப்படுத்தி, சம்பளம் வழங்க வேண்டும்; கூட்டுறவு கடனுக்கு வட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சங்கரசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
கிராம நிர்வாக லுவலர் சங்க மாநில செயலாளர் மெய்யப்பன், சாலை ஆய்வாளர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் இக்னேஷியஸ், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், சத்துணவு ஊழியர் சங்க பொருளாளர் பாண்டி, விடுதி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாதன், ஊரக வளர்ச்சி துறை சங்க செயலாளர் குமரேசன், சாலைப்பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் பிச்சை, இணை செயலாளர் மயிலேசன், செயற்குழு உறுப்பினர்கள் முத்தையா, கிருஷ்ணன் பேசினர். மாவட்ட பொருளாளர் சின்னப்பன் நன்றி கூறினார்.