Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இலவச காஸ் இணைப்பு 611 பேருக்கு வழங்கல்

இலவச காஸ் இணைப்பு 611 பேருக்கு வழங்கல்

இலவச காஸ் இணைப்பு 611 பேருக்கு வழங்கல்

இலவச காஸ் இணைப்பு 611 பேருக்கு வழங்கல்

ADDED : ஜூலை 30, 2010 03:47 AM


Google News

பொள்ளாச்சி : வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியை சேர்ந்த பயனாளிகள் 611 பேருக்கு இலவச காஸ் அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்பட்டது.வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியை சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச காஸ் அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கும் விழா, பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலகத்தில் நடந்தது.பொள்ளாச்சி வருவாய் கோட் டாட்சியர் அழகிரிசாமி தலைமை வகித்து பேசியதாவது:காஸ் இணைப்பு இல்லாத அனைவருக்கும் அரசு இலவச காஸ் இணைப்பு வழங்குகிறது.

வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் மொத்தம் 800 பேருக்கு இலவச காஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. அதில், முதற்கட்டமாக 611 பேருக்கு வழங்கப்படுகிறது.இணைப்பு பெறுபவர்கள் வீடுகளில் அதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். காஸ் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தக்கூடாது. இணைப் புக்கான புத்தகங்களை வேறு நபர்களிடம் ஒப்படைக்கக்கூடாது.



வீட்டு பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இலவசமாக வழங்கும் சலுகையை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முறைகேடாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு வருவாய் கோட்டாட்சியர் பேசினார்.நிகழ்ச்சியில் பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் துறை தனித்தாசில்தார் குப்புசாமி, நுகர்பொருள் வாணிபக்கழக துணை மேலாளர் (தரக்கட்டுப்பாடு)

முத்தழகு, பேரூராட்சி துணைத்தலைவர் முருகானந்தம், செயல்அலுவலர் செல்வராஜ் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us