ஆதிதிராவிட சமூகத்தினருக்கு முக்கியத்துவம் குறைப்பு: பா.ம.க.,வில் ராமதாசின் புதிய பாணி
ஆதிதிராவிட சமூகத்தினருக்கு முக்கியத்துவம் குறைப்பு: பா.ம.க.,வில் ராமதாசின் புதிய பாணி
ஆதிதிராவிட சமூகத்தினருக்கு முக்கியத்துவம் குறைப்பு: பா.ம.க.,வில் ராமதாசின் புதிய பாணி

பாட்டாளி மக்கள் கட்சியில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்படுவதாக முணுமுணுப்பு எழுந்துள்ளது.
பெண்ணாகரம் இடைத்தேர்தலில் ராமதாஸ், வீடு வீடாக சென்று வன்னியர்களை சந்தித்து பேசினார். 'நம் சமுதாயம் முன்னேற நம் கட்சி வளர வேண்டும்' என்றார். அதன் பயனாக இடைத் தேர்தலில் பா.ம.க., இரண்டாமிடம் பிடித்தது. இதனால் உற்சாகமடைந்த பா.ம.க.,வினர், மீண்டும் வன்னியர் கோஷத்தை பலமாக உச்சரிக்க துவங்கியுள்ளனர். வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டும் என போராட துவங்கியுள்ளனர். அத்துடன் கட்சியிலிருந்த ஆதிதிராவிட சமூகத்தினரை ஓரம் கட்ட துவங்கியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் முன்பு ஒன்றியத் தலைவர்களாக 41 இடங்களில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர். தற்போது ஐந்து பேர் மட்டுமே உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 21 ஒன்றியத் தலைவர்கள் இருந்தனர். தற்போது ஐந்து பேர் மட்டுமே உள்ளனர். கடலூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலா நான்கு மாவட்டத் தலைவர்கள் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்கள் இருந்தனர். தற்போது தலா ஒருவர் மட்டுமே உள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ஐந்து பேர் மாவட்டத் தலைவர்களாக இருந்தனர். தற்போது நான்கு பேர் நீக்கப்பட்டு விட்டனர். இது கட்சியில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் பா.ம.க., வன்னியர்களை மட்டும் உள்ளடக்கிய கட்சியாக மாறிவிடும். தனித் தொகுதிகளில் போட்டியிடக் கூட ஆள் இருக்க மாட்டார்கள் எனக் கட்சியில் உள்ள ஆதிதிராவிடப் பிரமுகர்கள் புலம்புகின்றனர்.
- நமது சிறப்பு நிருபர் -