போதிய டாக்டர் இன்றி நோயாளிகள் அவதி
போதிய டாக்டர் இன்றி நோயாளிகள் அவதி
போதிய டாக்டர் இன்றி நோயாளிகள் அவதி
ADDED : ஆக 05, 2010 11:28 PM
திருப்புவனம் : திருப்புவனம் அரசு சமுதாய நல மையத்தில் (மருத்துவமனை) போதிய டாக்டர் இல்லாமல், நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
இங்கு தினமும் 500 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால், விபத்தில் காயமடைவோருக்கு முதலுதவி இங்கு அளிக்கப்படுகிறது. மூன்று டாக்டர் பணியிடம் இருந்தும், ஒருவர் மட்டுமே உள்ளார். நோயாளிகள் கூட்டத்தை, ஒரு டாக்டரால் சமாளிக்க முடியவில்லை. அவர் விடுப்பில் செல்லும் போது, சிகிச்சைக்கு வழியில்லை. இதனால், நோயாளிகள் தனியார் மருத்துவமனையை நாடிச்செல்கின்றனர்.
பணியிடம் காலி: இரண்டு டாக்டர், மருந்து கட்டுபவர், பிரேத பரிசோதனை உதவியாளர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஒரு ஆண்டாகியும் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. செவிட்டு காதில் ஊதிய சங்காக சுகாதாரத்துறையின் நடவடிக்கை உள்ளது.
இதுகுறித்து மணல் மேடு கிராமத்தை சேர்ந்த ராஜா கூறுகையில், ''டாக்டர் இல்லாத பட்சத்தில் பணியாளர்கள், மருந்து கொடுக்கின்றனர். காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். இரவில் டாக்டர் தங்கி சிகிச்சை அளிக்கும் வகையில், மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும்,'' என்றார்.வள்ளி கூறுகையில்,''ஞாயிற்று கிழமையில் டாக்டர் இல்லாமல் அவதிப்படுகிறோம். மருந்து கட்டுபவர் இல்லாமல் அவதிப்படுகிறோம்,'' என்றார்.