ADDED : ஆக 08, 2010 02:26 AM
மானாமதுரை: பாலைவன தடுப்பு தினம், வறட்சி எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்றுகள் நடப்பட்டன.
தலைமை ஆசிரியர் டெய்சி நிர்மலா ராணி தலைமை வகித்தார்.
உதவி தலைமை ஆசிரியர் சுலோச்சனா முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதா மரக்கன்றுகளை வழங்கினார். ஆசிரியர் லட்சுமி பேசினார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துக்காமாட்சி ஏற்பாடுகளை செய்தார்.