/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கார் டயர் வெடித்து விபத்து: இருவர் பலிகார் டயர் வெடித்து விபத்து: இருவர் பலி
கார் டயர் வெடித்து விபத்து: இருவர் பலி
கார் டயர் வெடித்து விபத்து: இருவர் பலி
கார் டயர் வெடித்து விபத்து: இருவர் பலி
ADDED : ஆக 08, 2010 02:28 AM
சிவகங்கை : ராமநாதபுரம் எஸ்.பி.
பட்டணம் அருகே விளத்தூரை சேர்ந்தவர் மாரிமுத்து (50). நேற்று, இவரது மகன் அஜித் (10) மரத்தில் இருந்து கீழே விழுந்தார். சிகிச்சைக்காக டவேரா காரில் மதுரை சென்றனர். காலை 11 மணிக்கு, சிவகங்கை அருகே காரின் டயர் வெடித்து, மரத்தில் மோதியது. காரில் இருந்த அனைவரும் காயம் அடைந்தனர்.உறவினர் விஸ்வநாதன் (50) அதே இடத்தில் பலியானார். மாரிமுத்து மதுரை செல்லும் வழியில் இறந்தார். அஜித், தாய் சிட்டாள், பாட்டி சின்னப்பொண்ணு, டிரைவர் ரவீந்திரன், உறவினர்கள் ராஜூ, சுப்பிரமணி, மற்றொரு மாரிமுத்து ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.