ADDED : ஜூலை 30, 2010 10:27 PM
சத்திரப்பட்டி:சங்கரபாண்டியபுரத்தில் தே.மு.தி.க., நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
செயலாளர் குமார் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் சிவஞானகுருசாமி, கருப்பசாமி முன்னிலை வகித்தனர். கட்சித் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ஏழை மாணவர்களக்கு இலவச நோட்டு புத்தகங்கள், அன்னதானம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒன்றிய துணைச் செயலாளர் பொன்னுச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்குமார், மணிகண்டன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.