/உள்ளூர் செய்திகள்/கரூர்/கருப்பத்தூர் பஞ்., பகுதியில் மின் வயர் திருட்டு அதிகரிப்புகருப்பத்தூர் பஞ்., பகுதியில் மின் வயர் திருட்டு அதிகரிப்பு
கருப்பத்தூர் பஞ்., பகுதியில் மின் வயர் திருட்டு அதிகரிப்பு
கருப்பத்தூர் பஞ்., பகுதியில் மின் வயர் திருட்டு அதிகரிப்பு
கருப்பத்தூர் பஞ்., பகுதியில் மின் வயர் திருட்டு அதிகரிப்பு
ADDED : ஆக 05, 2010 02:52 AM
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள கருப்பத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட குழந்தைப்பட்டியில் விவசாய தோட்டங்களில், மின் ஒயர் திருட்டு அதிகரித்துள்ளது.
கருப்பத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வரகூர், குழந்தைப்பட்டி, அய்யர்மலை பகுதியில் விவசாயத்துக்கு அதிக அளவில் கிணற்று பாசனமே பயன்பாட்டில் உள்ளது. கிணற்றில் மின்மோட்டார் பொருத்தி, மின் சப்ளைக்கு அமைக்கப்பட்டுள்ள ஒயர்களை மர்ம நபர்கள் அடிக்கடி அறுத்து சென்றுவிடுகின்றனர். ஒயர் உள்ளே செம்பு கம்பி உள்ளதால், இத்தகைய திருட்டு இப்பகுதியில் அதிகரித்துள்ளது. ஒயர் திருட்டில் ஈடுபட்டுள்ளோர் குறித்து போலீஸில் புகார் அளித்தும் பயனில்லாததால், விவசாயிகளே குழுக்கள் அமைத்து இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். 'பகுதியில், அதிக அளவில் ஒயர் திருட்டில் ஈடுபடுவோர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.