உயிரியல் பூங்கா விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் அமல்படுத்த முடிவு
உயிரியல் பூங்கா விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் அமல்படுத்த முடிவு
உயிரியல் பூங்கா விலங்குகள் தத்தெடுப்பு திட்டம் அமல்படுத்த முடிவு
ADDED : ஆக 05, 2010 11:34 PM
சென்னை: உயிரியல் பூங்கா விலங்குகளை பெரிய நிறுவனங்கள் தத்து எடுத்து கொள்ளும் திட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படவுள்ளது.
வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறை செயலர் தேவேந்திரநாத் சாரங்கி கூறியதாவது: வனத்துறையில் முக்கிய பதவியான ரேஞ்சர் பதவிக்கு நீண்ட காலமாக நேரடி நியமனங்கள் நடக்காமல் இருந்தது.
வனக்காவலர், வனவர் பணிகளிலிருந்து பதவி உயர்வு மூலமே ரேஞ்சர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இதனால், பெரும்பாலும் வயதானவர்களே ரேஞ்சர் பணியில் உள்ளனர். இளைஞர்களை கொண்டு வரும் வகையில், நேரடி நியமனம் மூலம் ரேஞ்சர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இப்பதவிக்கு, டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யவுள்ளோம். விரைவில் காலியிட விவரங்கள் டி.என். பி.எஸ்.சி.,க்கு அனுப்பப்படும். முதுமலையில் யானைகளுக்கென தனிப்பாதையை (காரிடர்) அறிவிக்கும் வரைபடம் தயாராகி வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற உயிரியல் பூங்காக்களில் உள்ள விலங்குகளை தத்து எடுத்து கொள்ளும் திட்டத்தை பெரியளவில் செயல்படுத்த உள்ளோம். இதற்கான ஸ்பான்சர்கள், தொழில் துறை மூலம் பெரிய நிறுவனங்களிடம் பேசி முடிவு செய்யப்படும். குறிப்பிட்ட சில விலங்குகளின் மீது தனிக்கவனம் செலுத்தவும், அவற்றை சிறப்பாக பராமரிக்கவும் இத்திட்டம் உதவும். இவ்வாறு தேவேந்திரநாத் சாரங்கி கூறினார்.