/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு:அரசு தரப்பு சாட்சி பெண் எஸ்.ஐ.,பல்டிடாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு:அரசு தரப்பு சாட்சி பெண் எஸ்.ஐ.,பல்டி
டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு:அரசு தரப்பு சாட்சி பெண் எஸ்.ஐ.,பல்டி
டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு:அரசு தரப்பு சாட்சி பெண் எஸ்.ஐ.,பல்டி
டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கு:அரசு தரப்பு சாட்சி பெண் எஸ்.ஐ.,பல்டி
திண்டுக்கல்:திண்டுக்கல் டாக்டர் பாஸ்கரன் கொலை வழக்கில் நேற்று 6 பேரிடம் விசாரணை நடந்தது.
இந்த வழக்கின் விசாரணை திண்டுக்கல் விரைவு கோர்ட்டில் நடக்கிறது.நேற்று விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் ஆஜராயினர்.அரசு தரப்பு சாட்சிகளான போலீஸ்காரர்கள் மணிகண்டன், செல்வம், பன்னீர் செல்வம், ராஜலிங்கம்,ராஜேஸ்வரி, எஸ்.ஐ., பாலநாகஜோதி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. திருச்சி பட்டாலியனில் பணியாற்றும் பெண் எஸ்.ஐ., பாலநாகஜோதியிடம் முன்பு சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தும் போது, கார்த்திகேயன் காதலி மஞ்சுபார்கவியை தனக்கு தெரியும் என்றும், அவர் திருவாரூர் செல்லும் போது திருச்சியில் தனது வீட்டில் வந்து தங்கியதாக கூறி இருந்தார்.நேற்றைய விசாரணையில், தனக்கு கார்த்திகேயன், சங்கர், முகிலன் மட்டுமே தெரியும் என்றும்,ராஜ்குமார், மஞ்சுபார்கவி ஆகியோரை தெரியாது என்று தனது வாக்குமூலத்தை மாற்றி கூறினார். வழக்கு விசாரணையை வரும் ஆக.9க்கு நீதிபதி ராஜூ ஒத்தி வைத்தார்.