கோவை : அமிர்தா பல்கலை பொறியியல் மாணவர்களுக்கு வரவேற்பு விழா நேற்று நடந்தது விழாவில், அமிர்தா பல்கலை இணைவேந்தர் சுவாமி அபயாம்ருத சைதன்யா, துணைவேந்தர் வெங்கடரங்கன், பொறியியல் துறை முதல்வர் சந்திரசேகர், பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, பல்கலை பன்னாட்டு தொழிற்தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் ஆகியோர் பேசினார்.
கல்வியுடன் ஆன்மிகம் இணைந்து மாணவர்களுக்கு கற்பிப்பதே இப்பல்கலையின் தனித்தன்மையாகும். யுரேகா எக்சேன்ஞ்ச் திட்டப்படி அமிர்தா மாணவர்கள் ஐரோப்பிய பல்கலைகளில் படிக்கவும், ஆராய்ச்சி மேற்கொள்ளவும் முடிகிறது என நிர்வாகிகள் பேசினர்.விழாவில், இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர். மூன்று நாட்களாக மாணவர்களை பல்வேறு குழுக்களாக பிரித்து, பாடத்திட்டத்தின் வரிசையில் கல்லூரியின் எதிர்பார்ப்புகள் பற்றி அவர்களுக்கு விளக்கினர்.