/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிபோக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி
ADDED : ஆக 05, 2010 02:58 AM
ஓசூர்: ஓசூரில் நான்கு ரோடுகள் சந்திக்கும் பாகலூர் சர்க்கிங் ரோட்டில் பஸ் ஸ்டாப் செயல்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
ஓசூர் நகராட்சி அலுவலகம் எதிரே தாலுகா ஆபீஸ் சாலை, பாகலூர் சாலை, கிருஷ்ணகிரி- பெங்களூரு நான்கு வழிச்சாலைகள் சந்திக்கிறது. இதனால், இப்பகுதியில் போக்குவரத்து எப்போதும் அதிகமாக இருக்கும். போலீஸார் காலை முதல் இரவு வரை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினாலும், முழுமையாக போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடிவதில்லை. இப்பகுதியில் பாகலூர் சாலையில் நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே பஸ்ஸ்டாப் செயல்படுவதால், அரசு மற்றும் தனியார் பஸ்கள் இங்கு நின்று செல்கின்றன. இந்த பஸ்டாப்புக்கு 100 அடி தொலைவில் மற்றொரு பஸ்டாப் உள்ளது. டிரைவர்கள் சர்க்கிங் ரோடு சந்திப்பு பகுதியிலும் பஸ்களை நிறுத்துவதால், பயணிகள் இங்கு காத்திருகின்றனர். பஸ்கள் நின்று செல்வதால், பெங்களூரு- கிருஷ்ணகிரி சாலையிலும், பாகலூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக விபத்துகள் நடக்கிறது. போக்குவரத்து போலீஸார் விரைந்து நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இப்பகுதியில் பஸ்களை நிறுத்தாமல் பஸ் ஸ்டாப் பகுதியில் பஸ்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.