பாசிபட்டினம் கடலில் பாய்மரபடகு போட்டி
பாசிபட்டினம் கடலில் பாய்மரபடகு போட்டி
பாசிபட்டினம் கடலில் பாய்மரபடகு போட்டி
ADDED : ஆக 05, 2010 11:28 PM

தொண்டி: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே பாசிபட்டினம் முத்துமாரியம்மன் கோவில் விழாவையொட்டி, கடலில் பாய்மரபடகு போட்டி நடந்தது.
தொண்டி அருகே பாசிபட்டினம் முத்துமாரியம்மன் கோவில் விழா, கடந்த ஜூலை 27ல் காப்புக்கட்டுடன் துவங்கியது. இதையொட்டி, நேற்று முன்தினம் பூக்குழி, முளைபாரி ஊர்வலம் நடந்தது. நேற்று பிற்பகல் 2 மணிக்கு பாய்மரபடகு போட்டி நடந்தது. 12 படகுகள் கலந்து கொண்டன. ஒரு படகில் ஆறு பேர் இருந்தனர். கடல் மைல் தூரம் நிர்ணயிக்கபட்ட நிலையில், வாணவெடி சத்தம் கேட்டவுடன், படகுகள் கடலில் சீறிபாய்ந்தன. நீண்ட தூரத்தில் படகுகள் சென்று கொண்டிருக்கும் போது, காற்று பலமாக வீசியதில் படகு தரைபகுதி உடைந்ததால், இரண்டு படகுகள் கரைக்கு திரும்பின. போட்டியில் காளிஸ் குழு முதலாவதாகவும், மலையாண்டி குழு இரண்டாவதாகவும், பானுப்பிரியா குழு மூன்றாவதாகவும், பொன்னையா குழுவினர் நான்காவதாகவும் வந்து வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டன.