/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தேசிய நெடுஞ்சாலையில் அரைகுறை பணி கேள்விக்குறியாகும் தரம்தேசிய நெடுஞ்சாலையில் அரைகுறை பணி கேள்விக்குறியாகும் தரம்
தேசிய நெடுஞ்சாலையில் அரைகுறை பணி கேள்விக்குறியாகும் தரம்
தேசிய நெடுஞ்சாலையில் அரைகுறை பணி கேள்விக்குறியாகும் தரம்
தேசிய நெடுஞ்சாலையில் அரைகுறை பணி கேள்விக்குறியாகும் தரம்
ADDED : ஆக 05, 2010 11:31 PM
திருப்புத்தூர் : மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை போதிய பராமரிப்பு இன்றி, குழிகள் உருவாகி யுள்ளன.
இந்த ரோடு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரோடு புதுப் பிக்கும் பணியில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஈடுபடவில்லை. மாநில நெடுஞ்சாலை கட்டுப் பாட்டில் இருந்த போது, குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப் பிப்பு, பராமரிப்பு பணிகள் நடந்தன. இதனால் போக் குவரத்துக்கு எளிதாக இருந்தது.
தற்போது தரம் உயர்ந்த பின், ரோட்டின் தரம் கேள்விக்குறியாகி விட்டது. திருப்புத்தூர் புதுப் பட்டி பள்ளி அருகில் இருந்து, அரசு மருத்துவமனை வரை, பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளன. ஆனால், இரு முறை பராமரிப்பு என்ற பெயரால், தரமில்லாத பணிகளை செய்தனர். குழிகளை மூட முயற்சி எடுக்காமல், ரோடு ஒரங்களில் மண் கொட்டினர். ரோடு ஓரத்தில் தோண்டி மண்ணை எடுத்து, இப்பணிகளை செய்தனர். இதனால் ரோட்டின் அருகில் பெரிய குழிகள் உள்ளன. மழை பெய்தால் மண் அரிமானம் ஏற்படும். செம்மண் போடாமல், இதில் வீண் வேலை நடந்து வருகிறது. இது போன்ற அலட்சியம் தொடர்ந்தால், தேசிய நெடுஞ்சாலைக்கு உரிய தகுதியை, இந்த ரோடு இழக்கும்.